குவைத்தில் இருந்து நேற்று மட்டும் 300க்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பினர்!

Kuwait-India travel passengers
(PHOTO: Reuters)

குவைத் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானம் மூலம் நேற்று (ஜனவரி 5) மட்டும் 5,614 பேர் இந்தியா வந்துள்ளனர்.

வந்தே பாரத் என்னும் சிறப்பு திட்டம் மற்றும் Air bubble திட்டத்தின் கீழ், இந்திய அரசு தொடர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வருகிறது.

குவைத் வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாய PCR சோதனை

குவைத் விமான நிலையம் திறக்கப்பட்டதை அடுத்து, இந்த திட்டத்தின் மூலம் குவைத்திலிருந்து விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, குவைத்தில் இருந்து கோழிகோடுக்கு 184 பேரும், கோவா-மும்பைக்கு 151 பேரும் திரும்பியுள்ளனர்.

வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் இதுவரை 44.7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சர்வதேச பயணம் மேற்கொண்டுள்ளதாக இந்திய விமான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் மொபைல் தடுப்பூசி பிரிவுகள் அறிமுகம்

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter