இந்தியர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை; வக்கீல்களின் பட்டியல் தூதரகம் வெளியீடு..!!

Kuwait embassy advocate
Photo credit : IIK

குவைத்தில் பல்வேறு வழக்கறிஞர்கள் இந்தியர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்க முடிவெடுத்துள்ளனர் என்று இந்திய தூதரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தூதரகம் செய்திக்குறிப்பில், எந்தவொரு விஷயத்திலும் சட்ட ஆலோசனையைப் பெற விரும்பும் எந்தவொரு இந்தியர்களும் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு குறிக்கப்பட்ட கடித நகலுடன் நேரடியாக அவர்களை அணுகலாம்.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

மின்னஞ்சல் முகவரி : cw.kuwait@mea.gov.in

மேலும், இந்த சேவை இலவச சட்ட ஆலோசனைகளை மட்டுமே வழங்கும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனி நபர்கள் இதைத் தாண்டிய சேவைகளை தங்கள் விருப்பப்படி பயன்படுத்தலாம்.

Photo Credit : Indian Embassy kuwait

இவர்களிடம் ஆலோசனை பெற்று உங்கள் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்து எதாவது எதிர்விளைவு சந்திக்க நேர்ந்தால் இந்திய தூதரகம் பொறுப்பல்ல என்றும் இந்திய தூதரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter