பிலிபைன்ஸ் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களுக்கு குவைத் துணை அமீர் இரங்கல்..!!

Kuwait Deputy Amir sends condolence cable to Philippines president
Kuwait Deputy Amir sends condolence cable to Philippines president. (image credit : TDBN)

குவைத் துணைஅமீரும் மற்றும் மகுட இளவரசருமான ஷேக் நவாப் அல் அஹமத் அல் ஜாபிர் அல் சபாஹ் அவர்கள் தென் பிலிப்பைன்ஸில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு (Twin bomb blast) சம்பவத்தில் இறந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தென் பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த இரட்டை வெடி குண்டுவெடிப்பில் மரணித்தரவர்களுக்கு தனது மனமார்ந்த இரங்கலைத் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டேவுக்கு நேற்று (ஆகஸ்ட் 24) செவ்வாய்க்கிழமை அன்று குவைத் துணைஅமீரும் மற்றும் மகுட இளவரசருமான ஷேக் நவாப் அல் அஹமத் அல் ஜாபிர் அல் சபாஹ் அவர்கள் தெரிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

அதில் இறந்தவர்களுக்கு இரங்கலையும் மற்றும் காயமடைந்தவர்களுக்கு விரைவாக மீட்க இறைவனிடம் பிரதிப்பதாகவும் அவரது உயர்நிலை துணை அமீர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், பிரதம மந்திரி ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபா அவர்களும் இதேபோன்ற ஜனாதிபதி டூர்ட்டேவுக்கு தனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதாக அதிகாரபூர்வ குவைத் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த குண்டுவெண்டிப்பு சம்பவத்தில் 14 பேர் மரணித்துள்ளதாகவும், பலர் சிகிட்சையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதில் 5 பேர் இராணுவ வீரர்களும் மரணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!

முதல் குண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் பொறுத்தப்பட்டுருந்தாகவும், இரண்டாவது குண்டு ஒரு பெண் மனிதவெடிகுண்டாக இருந்ததாகவும், முதல் குண்டு வெடித்த ஓரிரு நிமிடங்களின் அடுத்த குண்டு வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms