COVID-19 தடுப்பூசி மருந்தின் முதல் தொகுதி குவைத்திற்கு எப்போது வந்தடையும்? – அமைச்சர் விளக்கம்!

Kuwait COVID-19 vaccine
Kuwait to receive COVID-19 vaccine on Wednesday

COVID-19 தடுப்பூசி மருந்தின் முதல் தொகுதி நாளை புதன்கிழமை குவைத் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடுவது குறித்த செயல்முறைகள் அடுத்த வாரம் தொடங்கும் என்றும் சுகாதார அமைச்சர் இன்று தெரிவித்தார்.

குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கான விமானங்கள் தற்காலிக நிறுத்தம் – UAE விமான நிறுவனங்கள்!

இந்த தடுப்பூசி நான்கு கட்டங்களில் வழங்கப்படும், அதாவது மிகவும் தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஷேக் பாசில் அல்-சபா (Sheikh Basel Al-Sabah) தெரிவித்தார்.

முதல் கட்டத்தில், அனைத்து சுகாதார பராமரிப்பு வழங்குநர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடங்குவதாகவும் கூறினார்.

தடுப்பூசி பெற முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 37,700 பேரை எட்டியுள்ளதாகவும், மேலும் முன்பதிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

சமூகத்தில் தடுப்பூசி பெற விரும்பும் அனைவருக்கும், மேலும் விரும்பம் தெரிவித்த குழுக்களுக்கும் அதனை வழங்குவதற்கான செயல்முறை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முடிந்தவரை அதிக சதவிகித அளவிலான மக்களுக்கு தடுப்பூசி போட அமைச்சகம் ஆர்வமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய கொரோனா வைரஸ்: எல்லைகளை மூடிய குவைத், சவூதி அரேபியா மற்றும் ஓமன்!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter