புதிய கொரோனா வைரஸ்: எல்லைகளை மூடிய குவைத், சவூதி அரேபியா மற்றும் ஓமன்!

(PHOTO: File/AFP)

பிரிட்டனில் வீரியமடையும் புதிய கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தின் காரணமாக, குவைத், சவூதி அரேபியா மற்றும் ஓமன் ஆகியவை வணிக விமானங்களை நிறுத்திவைப்பதாக மூன்று அரபு நாடுகளும் தெரிவித்துள்ளன.

குவைத் அனைத்து வணிக விமானங்களையும் நிறுத்திவைத்துள்ளது, மேலும் அதன் தரைவழி மற்றும் கடல் எல்லைகளை நேற்று இரவு 11 மணி முதல் அடுத்த மாதம் ஜனவரி 1 வரை மூடியுள்ளது என்று அரசு தகவல் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், குவைத் சரக்கு தொடர்பான நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா தனது தரைவழி மற்றும் கடல் எல்லைகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை மூடியது.

புதிய COVID-19 வைரஸ் வீரியமடையாத நாடுகளில் இருந்து சரக்குகளை கொண்டுவர இந்த நடவடிக்கைகள் பொருந்தாது என்று SPA அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.