குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கான விமானங்கள் தற்காலிக நிறுத்தம் – UAE விமான நிறுவனங்கள்!

UAE airlines halt Kuwait services
UAE airlines halt Kuwait services (Photo: Gulf News)

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அதிகாரிகளின் உத்தரவின் அடிப்படையில், மஸ்கட் (ஓமன்) மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கான விமானங்களை தற்காலிகமாக நிறுத்தப்போவதாக எத்திஹாட் (Etihad) ஏர்வேஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

எத்திஹாட் ஏர்வேஸ், அபுதாபி (AUH) மற்றும் சவூதி அரேபியா, ஓமானில் மஸ்கட் (MCT) மற்றும் குவைத் (KWI) ஆகியவற்றுக்கு இடையேயான பயணிகள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் என்று விமான செய்தித் தொடர்பாளர் Gulf செய்திக்கு தெரிவித்தார்.

புதிய கொரோனா வைரஸ்: எல்லைகளை மூடிய குவைத், சவூதி அரேபியா மற்றும் ஓமன்!

இதற்கிடையில், துபாயின் எமிரேட்ஸ் இரு நாடுகளுக்கான விமானங்களை டிசம்பர் 28 வரை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஓமான் எல்லைகள் மூடப்பட்டதால், எமிரேட்ஸ் டிசம்பர் 21-27 வரை சவுதி அரேபியாவில் இருந்து வரும் மற்றும் செல்லும் விமானங்களையும், டிசம்பர் 22-28 வரை குவைத் மற்றும் ஓமான் விமானங்களையும் நிறுத்தி வைப்பதாக விமான நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. .

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter