குவைத் விமான நிலையத்தில் உணவகங்கள் மற்றும் பிரார்த்தனை அறைகளை மீண்டும் திறப்பு..!

Kuwait Airports Restaraunts
Kuwait DGCA to reopen restaurants & prayer rooms at Kuwait International Airport. (Photo : IIK)

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் சேவைகளை மறுதொடக்கம் செய்யவவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து தெரிவித்துள்ளது.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வணிக நடவடிக்கைகளை மறுதொடக்கம் செய்வதற்கான செயற்குழு சுகாதார மற்றும் தடுப்பு தேவைகளுக்கு ஏற்ப விமான நிலையத்திற்குள் உள்ள உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் சேவையை பொதுமக்களுக்கு மறுதொடக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

மேலும், சுகாதார அதிகாரிகளின் ஒப்புதலுடன் சிவில் விமானப் போக்குவரத்து மூலம் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணத் தேவைகள் தொடர்ச்சியான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன என்று குவைத் விமான நிலைய விவகாரங்களுக்கான துணை இயக்குநர் ஜெனரல் சலே அல்-ஃபடாகி அவர்கள் தெரிவித்தார்.

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

மேலும், நாட்டில் மக்கள் ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்ய குவைத்தில் அழைப்புகள் அதிகரித்து வருகின்றன, பல அரசாங்க அமைப்புகள் தங்கள் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களை வெளியிட தூண்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை சுகாதார நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter