குவைத்தில் காலாவதியான விசாக்களுடன் தங்கியிருந்தால் நாள் ஒன்றுக்கு KD2 அபராதம்..!!

KD2 fine for overstaying with expired visas
KD2 fine for overstaying with expired visas. (image credit : Times Kuwait)

குவைத் குடியிருப்பு விவகாரங்களுக்கான MOI பொதுத் துறையின் கருத்துக்களின்படி, குடியிருப்பு மற்றும் அனைத்து வகையான விசிட் விசாக்களுக்கும் இன்னும் நீட்டிப்பு வழங்குவது குறித்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது.

விசா நீட்டிப்பை அனுமதிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்தால், குடியிருப்பு மற்றும் விசிட் விசாக்கள் காலாவதியான அனைவருக்கும் அதற்கான துறையின் மறுஆய்வு தேவையில்லாமல் புதுப்பித்தல் செயல்முறையை ஆன்லைன் அமைப்பு விரைவாக தானியங்கு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

ஆதாரங்களை மேற்கோள் காட்டி, குடியிருப்பு விவகாரங்கள் துறைகள் அறிவுறுத்தல்களுக்காகக் காத்துகொண்டு உள்ளதாகவும், அதுவரை, குடியிருப்பு அல்லது விசிட் விசா காலாவதியான அனைவருமே அடுத்த செப்டம்பர் தொடக்கத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!

மேலும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வில்லை என்றால், அவர்கள் சட்டத்தை மீறுபவர்களாக கருதப்பட்டு,மீறும் ஒவ்வொரு நாளும் இரண்டு தினார் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்ததால் சுமார் 40,000 வெளிநாட்டவர்கள் புதுப்பிக்க முடியாமல் தங்கியிருந்தனர், அவர்களுக்கு புதிய விசாக்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms