துபாய் வழியாக இந்தியர்கள் தொடர்ந்து குவைத் வருகின்றனர், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் முழு விவரம்..!!

Indians continue to arrive in Kuwait via Dubai
Indians continue to arrive in Kuwait via Dubai. (Photo : IIK )

இந்தியா உட்பட 32 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேரடியாக நுழைவதற்கான தடையை குவைத் தொடர்ந்த நிலையில், பல இந்தியர்கள் துபாய் வழியாக 14 நாட்கள் அங்கு தங்கியிருந்து இந்தியாவிலிருந்து குவைத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய புதுப்பிப்பின்படி, செல்லுபடியாகும் விசா உள்ளவர்கள் துபாய் அல்லது தடை பட்டியலில் இல்லாத வேறு எந்த நாடுகளிலும் 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால் இந்தியாவில் இருந்து குவைத்துக்குள் நுழைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையில் குவைத் செல்வதற்கு, முதலில் குவைத்தில் செல்லுபடியாகும் குடியிருப்பு வைத்திருக்க வேண்டும்.

பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 6 மாதம் செல்லுபடியாகும் பட்சத்தில் துபாய்க்கு வருகை விசா எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

பின்னர், துபாய்க்கு பயணம் செய்த 96 மணி நேரத்திற்குள் பயணிகள் இந்தியாவில் உள்ள ICMR அங்கீகரிக்கப்பட்ட எந்த மையங்களிலிருந்தும் PCR சோதனை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து துபாய் வழியாக குவைத் சென்ற ஒருவர் கூறுகையில், துபாய் விமான நிலையத்தில் ஒரு சோதனை நடத்தப்படும்.

அதில் NEGATIVE என்று வந்துவிட்டால், எந்தவொரு தனிமைப்படுத்தலும் இருக்காது என்றும், துபாயின் எந்த பகுதியில் வேண்டுமென்றாலும் தாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

துபாயில் 14 நாட்கள் தங்கியிருந்த பிறகு, 15 வது நாளில், அங்கீகரிக்கப்பட்ட எந்த மையங்களிலிருந்தும் நீங்கள் PCR சோதனை செய்யலாம்.

12 மணி நேரத்திற்குள் முடிவைப் பெறுவீர்கள், முடிவைப் பெற்றதும், குவைத்துக்கான பயணச் சீட்டை வாங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

இதற்கு, செல்லுபடியாகும் சிவில் ஐடி இருக்க வேண்டும் அல்லது உங்கள் மொபைல் போனில் “Kuwait Mobile App” ஐ பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

“Shlonik” என்ற பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குவைத்தை அடைந்ததும், “Shlonik” பயன்பாட்டை செயல்படுத்த விமான நிலையத்தில் உள்ள கவுண்டர்களில் ஒன்றில் குவைத்தில் நீங்கள் தங்கியிருக்கும் விவரங்களை வழங்க வேண்டும்.

தற்போதைய விதிப்படி நீங்கள் குவைத்தில் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms