குவைத் ஷூய்பா பகுதியின் துறைமுகத்தில் தீ விபத்து..!!

Firemen battle container crane fire at Shuaiba Port
Firemen battle container crane fire at Shuaiba Port. (Photo : Q8India)

குவைத்தைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் பல தீ மற்றும் சாலை விபத்து போன்றவற்றை கையாள்வதில் தீயணைப்பு வீரர்கள் இந்த வார முழுவதும் தங்களை முழுவதுமாக அர்பணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களில் ஒன்று செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி ஷூய்பா துறைமுகத்தில் உள்ள கண்டைனர் கிரேன் ஒன்றில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

அவசர அழைப்பிற்கு பதிலளிக்கும் விதமாக ஷூய்பா, மினா அப்துல்லா மற்றும் உம் அல்-ஹைமான் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

மேலும், அவை மற்ற கண்டைனர்களில் பரவுவதற்கு முன்பு தீயை அணைக்க முயன்று தீயை அணைத்தனர், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, மேலும் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டதாக குவைத் தீயணைப்பு சேவை இயக்குநரகம் (KFSD) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

இதற்கிடையில், வெள்ளியன்று ஜிலீப் அல்-ஷுயோக்கில் ஒரு வீட்டின் அருகே ஒரு மின் கேபிள் தீப்பிடித்ததைத் தொடர்ந்து தீப்பிடித்தது, மற்றும் தீ அருகில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று வாகனங்களை எரித்து நாசமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்களின் விரைவான முயற்சியால் அருகிலுள்ள மற்ற வாகனங்களுக்கு தீ பரவாமல் தடுக்க உதவியது, இந்த சம்பவத்தில் எந்த காயங்களும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டு, KFSD கூறியுள்ளது.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms