குவைத்தில் டிஜிட்டல் சிவில் ஐடி நிறுத்தப்படவில்லை – PACI அறிவிப்பு..!!

Digital Civil ID has not been stopped
Digital Civil ID has not been stopped. (image credit : Arab Times)

குவைத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்ட PACI-வின் டிஜிட்டல் சிவில் கார்டிற்கான “My identity” என்ற பயன்பாடு (Application) புதிய பதிவுக்காக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதை சிவில் தகவலுக்கான பொது ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இந்த இடைநிறுத்தம் அனைவருக்கும் செய்யப்படவில்லை என்றும், புதிய பயன்பாட்டாளர்களுக்கு (new subscriber) மட்டும் இடைநிறுத்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படாது..!!

ஏனெனில் இந்த அமைப்பு முந்தைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதாவது குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட 500,000 ஐ தாண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களிலும் பரிவர்த்தனைகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் சிவில் ஐடிக்கு அனைவரும் subscribe செய்யுமாரு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் இந்திய தூதராக சிபி ஜார்ஜ் பொறுப்பேற்றார்..!!

மேலும், இந்த பயன்பாட்டின் மூலம் மக்கள் வெளியில் செல்லும் பொது சிவில் ஐடியை எடுத்து செல்வதற்கான தேவையை நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணைந்து மொபைல் போன்களிலும் பயன்பாடு செயல்படுவதால், மக்கள் சிவில் கார்டு இல்லாத நிலையில் தங்கள் பரிவர்த்தனைகளை முடிப்பதை இது எளிதாக்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியா உட்பட 31 நாடுகளுக்கான தடையை நீக்க குவைத் பரிசீலனை..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms