குவைத்தில் நான்காம் கட்ட தளர்வுகள் அமல்படுத்தியும்; பகுதிநேர ஊரடங்கு தொடர்கிறது..!!

Curfew still on despite phase 4 start
Curfew still on despite phase 4 start. (image credit : Culture trip)

குவைத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் திட்டத்தின் நான்காம் கட்டம் நேற்று (ஆகஸ்ட் 19) செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த கட்டத்தில், ஐந்து மாத காலமாக மூடப்பட்டுருந்த சில வணிக நடவடிக்கைகளின் வணிக உரிமையாளர்கள் மீண்டும் தங்கள் வேலை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இயல்பு நிலைக்கு திரும்பும் திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தில் மறுதொடக்கம் செய்வதற்காக திட்டமிட்டுருந்த சில வணிக நடவடிக்கைகள் தற்போது அமலில் உள்ள நான்காம் கட்டத்தில் மறுதொடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் குவைத் அமீரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்..!!

அந்த நடவடிக்கைகளில் தையல்காரர்கள், அழகு மற்றும் சிகையலங்கார நிலையங்கள், ஜிம்னாஸ்டிக் அரங்குகள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவை அடங்கும்.

சுகாதார அமைச்சகத்தின் முன்னெச்சரிக்கை சுகாதாரத் தேவைகளைப் பின்பற்றி முக முகமூடிகளை அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை பின்பற்றி கொரோனா வைரஸ் பரவளிலுருந்து தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து 311 இந்தியர்களுடன் சென்னை வந்தடைந்தது குவைத் ஏர்வேஸ் விமானம்..!!

குவைத்தில் நான்காம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வந்தும் பகுதி நேர ஊரடங்கு உத்தரவுகள் இன்னும் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இரவு 9:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரைபகுதி நேர ஊரடங்கு உத்தரவுகள் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க : 31 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms