குவைத்தில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பேருந்துகள் செயல்படத் தொடங்கின..!!

Buses start operation with precautionary measures
Buses start operation with precautionary measures. (image credit : IIK)

குவைத்தில் சுமார் ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு, நேற்றைய (ஆகஸ்ட் 18) தினம் செவ்வாய்க்கிழமை முதல் குவைத் சாலைகளில் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பல பேருந்துகள் பயணிகளிடமிருந்து குறைந்த கட்டணத்தை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் பலர் கூட்டத்திற்கு பயந்து பொது பேருந்துகளைத் தவிர்க்கும் காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் திட்டத்தின் நான்காம் கட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்துக்கு சேவையை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் குவைத் அமீரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்..!!

ஒவ்வொரு பயணிகளின் பயன்பாட்டிற்காக பஸ்ஸின் முன்புறத்தில் சானிடைசர்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் இடையில் தூரத்தை வைத்திருக்க மற்ற பயணிகளிடமிருந்து டிரைவரை பிரிக்க ஒரு பிளாஸ்டிக் திரை வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து 311 இந்தியர்களுடன் சென்னை வந்தடைந்தது குவைத் ஏர்வேஸ் விமானம்..!!

பேருந்துகளுக்குள், சமூக தூரத்தை கடைபிடிக்கும் விதமாக ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள் மற்றொன்றை காலியாக்குவதையும் குறிக்கும் அறிகுறிகள் வைக்கப்பட்டுருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருக்கையில் ஒரு சுவரொட்டி மூலம் உட்கார்ந்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது அல்லது இருக்கைகளில் ஒரு பிளாஸ்டிக் டேப்பை வைப்பதன் மூலம் இந்த இருக்கையில் உட்கார அனுமதி இல்லை என்பதை குறிக்கும் விதமாக வைக்கப்பட்டுருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 31 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms