குவைத்தின் அல்-சபா சுகாதார மண்டலத்தில் பெரும் தீ விபத்து; சுமார் 55 தீயணைப்பு வீரர்கள் காயம்..!!

Around 55 fire fighters suffered injuries at Al-Sabah health zone fire
Around 55 fire fighters suffered injuries at Al-Sabah health zone fire. (Image credit : IIK)

குவைத்தின் அல் சபா சுகாதார மண்டலத்தில் கட்டுமானத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தீயணைப்புத் துறை நேற்று (செப்டம்பர் 12) சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.

குவைத் நேரம் பிற்பகல் 3:15 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 55 தீயணைப்பு வீரர்கள் கடுமையான போராடி சோர்வுக்கு ஆளானதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

தீயணைப்பு துறையால் பயன்படுத்தப்பட்ட ஒரு வெப்ப கேமராவில் சுமார் 322 டிகிரி செல்சியஸில் தீயணைப்பு இடத்தில் வெப்பநிலை இருந்ததாக பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் சில தளங்கள் தற்காலிக கிடங்குகளாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு பாதுகாப்பு விதிகளை கருத்தில் கொள்ளாமல் தோராயமாக பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுருந்ததாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

சம்பவம் நடத்த இடத்திற்கு துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான அனஸ் அல் சலே அவர்கள் வந்து பார்வையிட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீ விபத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறியவும், தீக்கான காரணத்திற்கு எதிராக அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவும் சுகாதார அமைச்சகம் விசாரணைக் குழுவை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook

? Twitter