குவைத்தில் முக்கியமான பதவிகளில் இருந்த 34 வெளிநாட்டவர்கள் பணிநீக்கம்..!!

34 expats holding important posts terminated.
34 expats holding important posts terminated. (image credit : Arab Times)

குவைத் சமூக விவகார அமைச்சரும் பொருளாதார விவகாரத்துறை அமைச்சருமான மரியம் அல் அகீல் அவர்கள் சமூக விவகார அமைச்சகத்தில் பணிபுரியும் வெளிநாட்டினரை பணியிலிருந்து மாற்றுவதற்கான பணியைத் தொடங்கியுள்ளதாக அல் ராய் தினசரி தெரிவித்துள்ளது.

சமூக விவகார அமைச்சகத்தின் துணை செயலாளர் அப்துல் அஜிஸ் ஷூயிப் அவர்கள், சமீபத்தில் 34 வெளிநாட்டு தொழிலாளர்களை இரண்டாவது ஒப்பந்தத்தின் கீழ் பணிநீக்கம் செய்வதற்கான முடிவை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

அமைச்சரின் அலுவலகத்தில் சட்ட ஆலோசகர், துணை செயலாளர், அலுவலகத்தில் கணக்கியல் நிபுணர், கூட்டுறவுத் துறை உதவி துணை செயலாளர் அலுவலகத்தில் ஒரு மூத்த சட்ட நிபுணர் போன்றோர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுமட்டுமின்றி சமூக பாதுகாப்புத் துறையில் சமூக மற்றும் உளவியல் சேவை நிபுணர்கள் உட்பட 34 வெளிநாட்டு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!

அமைச்சகத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்களை பணிநீக்கம் செய்வதற்கான நடைமுறைகள் வெளிநாட்டு அரசாங்கத் துறை ஊழியர்களை குடிமக்களுக்கு மாற்றுவதற்கான அரசின் கொள்கைக்கு ஏற்ப உள்ளதாகவும், அவர்களில் சிலர் சட்டப்பூர்வ ஓய்வூதிய வயதை எட்டியுள்ளனர், அதாவது 60 வயதை தாண்டியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms