குவைத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மற்றுமொரு நாடு சேர்ப்பு..!!

14-day quarantine must; One more country may add to the ban list
14-day quarantine must; One more country may add to the ban list. (image credit : IIK)

குவைத்திற்குள் உள்வரும் அனைத்து பயணிகளுக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் அவசியம் என்றும், தற்போது இந்த காலத்தை குறைக்க எந்த நோக்கமும் இல்லை என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், குவைத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுருந்த நாடுகளின் பட்டியலில் மற்றும் ஒரு நாட்டின் பெயரை சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படாது..!!

தற்போது, குவைத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியல் 31லிருந்து 32 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 32 வது நாடாக அமைச்சர்கள் சபை ஆப்கானிஸ்தானை சேர்க்கும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி அல் கபாஸ் தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ப்பதற்கான காரணம் விமான நிலையத்தில் அதன் குடிமக்களிடமிருந்து எடுக்க பட்ட மாதிரிகள் பாசிட்டிவ் முடிவுகள் வெளிவந்ததே என்று அல் கபாஸ் தினசரி செய்தி மேலும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் இந்திய தூதராக சிபி ஜார்ஜ் பொறுப்பேற்றார்..!!

முன்னதாக, தடைக்கு உட்பட்ட நாடுகள் பின்வருமாறு: இந்தியா, ஈரான், சீனா, பிரேசில், கொலம்பியா, ஆர்மீனியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், சிரியா, ஸ்பெயின், சிங்கப்பூர், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, இலங்கை, நேபாளம், ஈராக், மெக்சிகோ, இந்தோனேசியா, சிலி , பாகிஸ்தான், எகிப்து, லெபனான், ஹாங்காங், இத்தாலி, வடக்கு மாசிடோனியா, மால்டோவா, பனாமா, பெரு, செர்பியா, மாண்டினீக்ரோ, டொமினிகன் குடியரசு மற்றும் கொசோவ் ஆகிய நாடுகளாகும்.

இதையும் படிங்க : இந்தியா உட்பட 31 நாடுகளுக்கான தடையை நீக்க குவைத் பரிசீலனை..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms