குவைத் மற்றும் இந்தியா இடையே “Air Bubble” ஒப்பந்தம்; ஒரு நாளைக்கு 1,000 பேர் தாயகம் திரும்ப அனுமதி..!!

1,000 Indians per day begin to depart
1,000 Indians per day begin to depart. (image credit : The Indian Express)

இந்தியா மற்றும் குவைத்திற்கு இடையே நடைபெற்ற “Air bubble” ஒப்பந்தத்தின்படி, குவைத்திலிருந்து ஓரு நாளைக்கு 1,000 பேரை இந்தியாவிற்கு அழைத்துவர தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவிற்கு திரும்ப விருப்பமுள்ளவர்களுக்கான தாயகம் செல்லும் விமானங்கள் நேற்று (ஆகஸ்ட் 13) முதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் இயல்பு நிலைக்கு திருப்புவதற்கான திட்டத்தின் நான்காம் கட்டம் தொடங்குவதற்கான தேதி அறிவிப்பு..!!

இந்தியா உட்பட 31 நாடுகளில் இருந்து குவைத்துக்கு வெளிநாட்டினர் நுழைவதைத் தடுப்பதற்காக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு இணங்க விமானங்கள், ஒப்பந்தத்தின்படி குவைத்திலிருந்து புறப்படுவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புறப்படும் பயணிகளை ஆகஸ்ட் 18 முதல் 31 வரை ஒரு நாளைக்கு 2,500 ஆக உயர்த்த ஒருங்கிணைப்பு நடந்து வருகிறது என்றும், இது விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயதடைந்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக பட்டம் இல்லாதவர்கள் கவனத்திற்கு..!!

புறப்படும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மாறுபடும் என்றும், ஆனால் இது பயணிகளின் முன்கூட்டியே முன்பதிவைப் பொறுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஒப்புக் கொள்ளப்பட்ட இட ஒதுக்கீடு ஒரு நாளைக்கு 1000 பயணிகள், இதில் உள்ளூர் விமான நிறுவனங்களுக்கு 500 இடங்களும், இந்திய விமான நிறுவனங்களுக்கு 500 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து தமிழகம் வரவிற்கும் விமானங்களின் அட்டவனை வெளியீடு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms