குவைத்தில் 4 மாதம் சம்பளம் வழங்காத எண்ணெய் நிறுவனத்தை எதிர்த்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!!

Worker protest as salary not paid for 4 month by an oil company in Abdali. (photo : AraB times)

மனிதவள மற்றும் குடியிருப்பு விசாரணைகளுக்கான பொது அதிகாரசபை, குவைத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அப்தாலி பகுதியில் எண்ணெய் துறையில் இயங்கும் ஒரு நிறுவனத்தின் தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களுக்கு சம்பளம் வழங்காததற்காக தொழிலாளர்கள் இரவு நேரத்தில் போராட்டம் நடத்துகின்றனர் என்று மனிதவள ஆணையத்தின் குழுவின் தலைவர் முஹம்மது தஹாம் அல்-தஃபிரி அவர்கள் தெரிவித்தார்.

கூட்டுக் குழுவில் உள்ள ஆய்வுக் குழுக்களின் உறுப்பினர்கள் தேவையான நடவடிக்கைகள் எடுத்து உடனடியாக தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்குமாறு தெரிவித்துள்ளதாக அல்-தாஃபிரி அவர்கள் தெரிவித்துள்ளார்.