குவைத்தின் ஜஹ்ரா பகுதியில் மணல் லாரி கார்களுடன் மோதி விபத்து; 3 பேர் மரணம் மற்றும் 5 பேர் காயம்..!!

Three died and five injured in a truck accident in Jahra
Three died and five injured in a truck accident in Jahra. (image credit : IIK)

குவைத்தின் ஜஹ்ரா பகுதியில் மணல் லாரி மற்றும் இரு கார்கள் விபத்துள்ளாகியுள்ளதாக ஒரு அறிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், இந்த சாலை விபத்தில் மணல் லாரி ஒன்று இரு கார்களுடன் மோதி கோரவிபத்து ஏற்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

ஜஹ்ரா சாலையில் நேற்று (செப்டம்பர் 1) செவ்வாய்க்கிழமை அன்று நடந்த இந்த பெரிய கோர விபத்தில் மூன்று பேர் இறந்துள்ளதாகவும் மற்றும் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தின் ஜஹ்ரா கவர்னரேட் கட்டிடத்திற்கு அருகே குவைத் நகரத்தை நோக்கி ஜஹ்ரா சாலையில் மணல் லாரி மற்ற இரண்டு கார்களுடன் மோதியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சுலைபிகாட், தஹ்ரிர் மற்றும் ஜஹ்ராவைச் சேர்ந்த தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மேலும், தீயணைப்பு குழுக்கள் வந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms