குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

Murder of Bangladeshi mother and daughter discovered in Jleeb
Murder of Bangladeshi mother and daughter discovered in Jleeb. (image credit : Times Kuwait)

குவைத்தில் பங்களாதேஷை சேர்ந்த தாய் மற்றும் மகள் இருவரும் அறையிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் ஒரு அறைக்குள் இரண்டு பேர் இறந்து கிடப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

அந்த ஜிலீப் அல் ஷுயோக் பகுதியின் ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் சடலங்கள் கிடப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொது, அங்கு இரண்டு பெண்களின் உடல்கள் ரத்த தடயங்களுடன் கண்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!

தற்போது, அவர்கள் இருவரும் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்றும், இருவரும் தாய் மற்றும் மகள் என்றும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு கொலை சம்பவமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது, இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms