குவைத்தில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து பிராத்தனை நேரங்களில் மாற்றம்..!!

New prayer timings announced, 20 mins gap between Adhan and Iqama
New prayer timings announced, 20 mins gap between Adhan and Iqama. (image credit : Q8india)

குவைத்தில் தற்போது பிராத்தனை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் ஐந்து மாதங்கள் நீண்ட இரவு ஊரடங்கு உத்தரவை நீக்கிய பின்னர் புதிய பிரார்த்தனை நேரத்தை அறிவித்தது.

புதிய நேரங்களின்படி, இப்போது அதானுக்கும் இகாமாவிற்கும் இடையிலான இடைவெளி 20 நிமிடங்கள் இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

ஆனால், மக்ரிப் பிராத்தனைக்கு மட்டும் அதானுக்கும் இகாமாவிற்கும் இடையிலான இடைவெளி 10 நிமிடங்கள் இருக்கும் என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், முசல்லா நிசா என்று அழைக்கப்படும் பெண்களுக்கான பிரார்த்தனை பிரிவு தினசரி பிரார்த்தனைகளுக்கு திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

குவைத் அமைச்சரவை, பல நாட்களுக்கு முன்பு, வழிபாட்டாளர்கள் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மசூதிகளில் மீண்டும் பிரார்த்தனை தொடங்க அங்கீகாரம் அளித்திருந்தது.

நோய் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னர், வெள்ளிக்கிழமை பிரார்த்தனை மற்றும் வழக்கமான பிரார்த்தனைகளுக்கு நான்கு மாத கொரோனா வைரஸ் தடையை நீக்க குவைத் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms