குவைத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் மரியம் அல் அகீல்

More than a million work permits issued in the last five year
More than a million work permits issued in the last five year. (image credit : IIK)

குவைத்தில் கடந்த ஐந்து வருடங்களில் மொத்தமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலை அனுமதி (Work Permits) வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் சமூக விவகார அமைச்சரும் மற்றும் பொருளாதார விவகாரத்துறை அமைச்சருமான மரியம் அல் அகீல் அவர்கள் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலை அனுமதி வழங்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

புள்ளிவிவரங்களின்படி, 2015 ஆம் ஆண்டில் 252,370 வேலை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

இதேபோன்று 2016 இல் 261,550 வேலை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2017 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த வேலை அனுமதிகளின் எண்ணிக்கை 292,948 ஐ எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அதற்கு அடுத்த ஆண்டு 2018 இல் வேலை அனுமதிகளின் எண்ணிக்கை 135,310 ஆக குறைக்கப்பட்டது.

பின்னர், 2019 ல் 125,129 வேலை அனுமதி மட்டுமே வெளங்கப்பட்டுள்ளதாக குவைத் சமூக விவகார அமைச்சரும் மற்றும் பொருளாதார விவகாரத்துறை அமைச்சருமான மரியம் அல் அகீல் அவர்கள் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms