குவைத்தில் தினசரி அடிப்படையில் 180 நபர்களுக்கு COVID-19 சோதனை நடத்த முடிவு – MOH

MOH to conduct random test on 180 individuals on daily basis. (photo : Q8india.com)

குவைத்தில் ஒரு நாளைக்கு 180 நபர்கள் என்ற விகிதத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தவுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இரு பாலினருக்கும் இடையில் சமமான எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டு பரிசோதனை நடைபெறும், மேலும் அந்த நபர் குறைந்தது 18 வயது முதல் 70 வயதிற்குள் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண் மூலம் தனிநபர்கள் தோராயமாக தேர்வு செய்யப்படுவார்கள், தேர்வு செய்யப்பட்ட நபருக்கு பரிசோதனை நடக்கும் தேதி, இடம் மற்றும் நேரம் குறித்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தெரிவிப்பட்டுள்ளது.

மேலும், தடை விதிக்கப்பட்ட நேரத்தில் பரிசோதனைக்கு வருவதற்கான அனுமதியை சிவில் தகவலுக்கான link மூலம் பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.