குவைத்தில் வைரஸிற்கு எதிராக அயராமல் உழைத்துவரும் சுகாதார ஊழியர்களுக்கு கால இடைவெளியில் விடுப்பு அளிக்கப்படும் – MOH

MoH allows periodic leave for staff. (image credit : Arab Times)

குவைத் சுகாதார அமைச்சகம் அதன் ஊழியர்களுக்கு ஜூலை 19 முதல் அக்டோபர் 1 வரை கால இடைவெளியில் விடுமுறைக்காக விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக சுகாதார ஊழியர்கள் அனைவரும் எந்த ஒரு விடுமுறையும் இல்லாமல் வைரஸிற்கு எதிராக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கொரோனா தொற்றுநோய் தொடங்கியபோது, ​​அமைச்சகம் தனது ஊழியர்களை தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக அவ்வப்போது விடுப்பு எடுப்பதை முற்றிலுமாக நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றறிக்கையின் படி, விடுப்பு காலம் 14 நாட்களுக்கு வழங்க படும் என்றும் அதற்கு மேல் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படாது.

மேலும், எந்தவொரு காலகட்டத்திலும் ஊழியர்கள் விடுப்பு அனுபவிப்பவர்களின் சதவீதம் 15%ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter : https://twitter.com/kuwaittms?s=08

? Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

? Sharechat : https://www.sharechat.com/tamilmicsetkw/