மகளுடன் ஜாக்கிங் சென்ற தந்தைக்கு கத்திக்குத்து – இருவர் கைது

Man stabbed by two men while jogging

ஜாகிங் சென்றுகொண்டிருந்த போது இளம் பெண் ஒருவரின் தந்தையை குத்தியதற்காக இரண்டு இளைஞர்களை குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அல் ராய் செய்தி வெளியிட்டுள்ளது.

தந்தை மற்றும் மகள் இருவரும் ஜாக்கிங் செல்லும்போது, இரு குவைத் இளைஞர்களும் அந்த இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததாகவும், பெண்ணை நெருங்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குவைத்தில் குறைந்து வரும் COVID-19 வைரஸ் பாதிப்புகள்…!

தனது மகளை நெருங்கும் அவர்களை தடுக்க முயன்ற தந்தையை, இளைஞர்களில் ஒருவர் கத்தியை வைத்து குத்திவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இது பற்றி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சந்தேகநபர்கள் இருவரின் அடையாளங்கள் அதிகாரிகளிடம் கூறப்பட்டது.

பின்னர், காவல்துறை அதிகாரிகள் அவர்களைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டனர்.

ஆண்டின் சர்வதேச முஸ்லிம் என்ற விருதை வென்ற குவைத் பெண்மணி!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter