குவைத்தில் மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் செயல்படும் நேரங்களில் மாற்றம்..!!

Malls & Commercial complexes to operate from 10 am to 10 pm.
Malls & Commercial complexes to operate from 10 am to 10 pm. (image credit : IIK)

குவைத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (ஆகஸ்ட் 30) ஞாயிற்றுக்கிழமை முதல் குவைத்தில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் கொரோனா தொற்றுநோய் பரவல் காரணாமாக விதிக்கப்பட்ட மிக நீண்ட ஊரடங்கு உத்தரவு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:00 மணிக்கு முதல் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

முன்னதாக, கொரோனா வைரஸ் பாதிப்பின் தொடக்கத்தில் அமைச்சர்கள் கவுன்சில் நாட்டில் ஒரு பகுதி தடையை விதிக்க மார்ச் 22 முதல் முடிவு செய்தது, பின்னர் மே 10 முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஒரு விரிவான தடையாக அதை மாற்றியமைத்து அறிவிக்கப்பட்டது.

பின்னர் அது மே 30 அன்று ஒரு பகுதி தடைக்கு மீண்டும் மாற்றியமைத்து, அதன் மணிநேரம் குறைக்கப்பட்டது, தற்போது இன்று ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு முற்றிலுமாக நீக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

குவைத்தில் உள்ள அணைந்து வணிக வளாகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குவைத்தின் அணைந்து பகுதியிலும் உள்ள கூட்டுறவு சங்கங்களும் 24 மணி நேரம் செயல்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms