குவைத்தில் குளிர்கால காய்ச்சலுக்கான தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது MOH..!!

Kuwait winter flu vaccine
Health Ministry launches winter flu vaccination campaign. (Photo Credit : Q8inida)

குவைத்தின் சுகாதார அமைச்சகம் பருவக்கால தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பருவக்கால காய்ச்சல் மற்றும் நிமோகோகல் நிமோனியாவுக்கு எதிராக இந்த தடுப்பூசி போடும் பணி தொடங்கியதாக MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

இந்த தடுப்பூசி போடும் பணி யர்மூக்கில் அமைந்துள்ள அப்துல்லா சென்டரின் யூசெப் அல்-அப்துல்ஹாதி கிளினிக்கில் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை காய்ச்சலால் இறப்பவர்களின் விகிதம் 1.3 சதவீதத்திலிருந்து 0.4 சதவீதமாக குறைந்துள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் பொது சுகாதார விவகாரக்குளுவின் உதவி துணை செயலாளர் புத்தைனா அல்-முடாஃப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, தடுப்பூசி தற்போது ஆண்டுக்கு 2 முதல் 3 மில்லியன் இறப்புகளைத் தடுக்கிறது என்று சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான டாக்டர். அப்துல்லா அல்-சனத் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசி காலரா, ஹெபடைடிஸ் பி, இன்ஃப்ளூயன்ஸா, தட்டம்மை, மூளைக்காய்ச்சல், வூப்பிங் இருமல், நிமோனியா, போலியோ, ரூபெல்லா, டைபாய்டு மற்றும் பிற நோய் தொற்றிலிருந்து சமூகத்தை பாதுகாக்கின்றது என்றும் அப்துல்லா அல்-சனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

சுகாதார அமைச்சகத்தின் நோய் தடுப்பு சுகாதாரத் துறையின் தலைவர் இப்ராஹிம் அல்-சலேஹ் அவர்கள் அருகில் உள்ள சுகாதார மையத்தில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

மேலும், காய்ச்சலுக்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மருந்துகளையும், நிமோனியாவுக்கு 70,000 மருந்துகளையும் 34 கிளினிக் மற்றும் தடுப்பூசி மையங்களுக்கு சுகாதார அமைச்சகம் விநியோகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter

Related posts

குவைத்தில் மேலும் இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு..!!

Editor

குவைத்தில் ஃபர்வானியா பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 6 பேர் கைது..!!

Editor

குவைத்திலிருந்து இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் அட்டவணை வெளியீடு..!!

Editor