குவைத்தில் வரும் புதன்கிழமை (ஜூன் 10) முதல் மூன்று மாதங்களுக்கு பிறகு மசூதிகள் மீண்டும் திறப்பதற்கு அனுமதி..!!

Kuwait to reopen mosques in some areas as of Wednesday. (photo :IIK)

குவைத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடிப்படையில் ஏறக்குறைய மூன்று மாதங்கள் முன்னர் மூடப்பட்ட மசூதிகள் மீண்டும் புதன்கிழமை நிலவரப்படி சில பகுதிகளில் திறக்க குவைத்தின் அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில், அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சர் Fahad Al – Afasi ஜூன் 10 புதன்கிழமை நண்பகல் தொழுகையுடன் மீண்டும் தொடங்குவோம் முதல்கட்டமாக குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் உள்ள மசூதிகளில் தொழுகைக்கு வரும் விசுவாசிகளை சுகாதாரத்துறை அமைச்சகத்தின் நெறிமுறைகள் கடைபிடித்து அனுமதிக்கும் என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நண்பகல் பிரசங்கமும் மற்றும் தொழுகை குவைத் நகரில் உள்ள தலைமை கிராண்ட் மசூதியில் மட்டுமே நிகழ்த்தப்படும் என்றும், அதை அதிகாரப்பூர்வ குவைத் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த தொகுதியில் மசூதியின் போதகர் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் கூறினார்.

மசூதிகளை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சகம் முடித்துவிட்டதாகவும், வைரஸ் பரவுவதைத் தடுக்க குவைத் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ள நெறிமுறைகள் அடிப்படையில் அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யபட்டுள்ளது என்று Fahad-Al – Afasi அவர்கள் குறிப்பிட்டார்.