சர்வதேச விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க குவைத் முடிவு!

(PHOTO: Ben Smithson/The Points Guy)

குவைத் சர்வதேச விமான சேவைகளை மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 2 (சனிக்கிழமை) முதல் தொடங்கும் என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.

குவைத் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட இந்தியர்!

பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் புதியவகை கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை நீட்டிக்க வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்ததால் குவைத் அதன் எல்லைகளை மீண்டும் திறக்க உள்ளது.

மேலும், இந்த கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான முன்னேற்றங்களின்படி இந்த முடிவு மறுஆய்வு செய்யப்படும் என்றும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் புதிய பரவல் நாட்டில் கண்டறியப்படவில்லை என்பதை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்திய பின்னர் ஜனவரி 2 முதல் அதன் எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் வீரியமடையும் புதிய கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தின் காரணமாக, குவைத் அதன் வணிக விமானங்களை நிறுத்திவைப்பதாக முன்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் வீட்டுப் பணியாளர்களின் 60,000 உணவு ரேஷன் அட்டைகள் ரத்து

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter