உலக பாஸ்போர்ட் தரவரிசையில் குவைத் பாஸ்போர்ட் 36வது இடம்..!!

Kuwait passport Ranking
Photo Credit : Al Anba

2020 ஆம் ஆண்டிற்கான ஆர்டன் கேபிடல் பாஸ்போர்ட் குறியீட்டின்படி, குவைத் பாஸ்போர்ட் வலிமையின் அடிப்படையில் உலகில் 36 வது இடத்தில் உள்ளது.

இதே இடத்தை பராகுவே மற்றும் செயிண்ட் லூசியாவுடன் பகிர்ந்து கொள்கிறது என்று அல்-கபாஸ் தினசரி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

குவைத் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் விசா இல்லாமல் பார்வையிடக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 193 நாடுகளை உள்ளடக்கிய இந்த குறியீடு குவைத்தை மதிப்பிடுகிறது.

குறியீட்டின்படி, அமீரகத்தின் பாஸ்போர்ட் 14 வது இடத்தில் உள்ளது, இது அரபு நாடுகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

அதன்பிறகு , உலகில் 34 வது இடத்தைப் கத்தார் பிடித்துள்ளது.

அரபு நாடுகளில் குவைத் பாஸ்போர்ட் மூன்றாவது இடத்திலும், பஹ்ரைன் 41 வது இடத்திலும், சவுதி அரேபியா 44 வது இடத்திலும், ஓமான் சுல்தானேட் 45 வது இடத்திலும் உள்ளன.

2020 ஆம் ஆண்டில் நியூசிலாந்து பாஸ்போர்ட் உலகின் வலிமையான பாஸ்போர்ட்டாக உருவெடுத்தது.

ஜெர்மனி, ஆஸ்திரியா, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பாஸ்போர்ட் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டது.

பல நாடுகள் அமெரிக்க பயணிகளை வரவேற்காததால், அமெரிக்க நிர்வாகம் COVID-19 ஐ தவறாக கையாண்டதால் அமெரிக்க பாஸ்போர்ட்டின் நிலை 21 ஆக குறைந்துள்ளது.

புதிய விசா தேவைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள COVID-19 நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் பயண தடை காரணமாக குறியீட்டு புதுப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter