குவைத் அமைச்சர், இந்திய அமைச்சருடன் இரு நாடுகளின் வர்த்தக உறவுகள் குறித்து கலந்துரையாடினார்..!!

Kuwait Minister discusses trade relations with Indian Minister. (image credit : IIK)

குவைத் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலீத் அல்-ரூதன் அவர்கள் நேற்று (ஜூலை 21) செவ்வாய்க்கிழமை அன்று இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயலுடன் காட்சி (Visual) தொடர்பு மூலம் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் பல்கலைக்கழகம் 2019-2020 கல்வியாண்டை ஆன்லைனில் மீண்டும் தொடங்குவதற்கான தேதி அறிவிப்பு..!!

இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டின் அமைச்சர்களும் இந்தியா மற்றும் குவைத்திற்கு இடையிலான தனித்துவமான உறவுகளை பாராட்டினர்.

இதையும் படிங்க : குவைத்தில் இந்தியர் ஒருவர் கடலில் மூழ்கி பலி..!!

மேலும், வரவிருக்கும் காலகட்டத்தில் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான சில வணிக பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms