குவைத்தில் பணிப்பெண்களுக்கு நுழைவு விசா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்..!!

Kuwait Maids Protest
Photo Credit : TimesKuwait

குவைத்தில் வீட்டு பணிப்பெண்களை சேர்க்கும் அலுவலகங்களின் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் சுகாதார அமைச்சகத்தில் நடைபெற்றுள்ளது என்று அல்-ஜரிடா செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

இந்த ஆர்ப்பாட்டத்தில் வீட்டு பணிப்பெண்களுக்கு நுழைவு விசா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் இன்றுவரை 420 ஆட்சேர்ப்பு அலுவலகங்களுக்கு 6,720,000 தீனர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, சிறிய அலுவலகங்களுக்கு 2,000 தீனார்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

எங்களுக்கு அதிகமான இழப்புகள் ஏற்பட்டுள்ளதால் குவைத் நீதித்துறையை நாடுவதற்கு முன்பு எங்கள் கோரிக்கையை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter