குவைத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனத்தை ஹேக் செய்த வெளிநாட்டினருக்கு 7 ஆண்டுகள் சிறை..!!

Kuwait KUNA hacker
Photo credit : TimesKuwait

குவைத்தின் KUNA-வை ஹேக் செய்த எகிப்து சேர்ந்த வெளிநாட்டவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குவைத் நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான KUNA-வை ஹேக் செய்து போலி செய்திகளை வெளியிட்டதற்காக குற்றவியல் நீதிமன்றம் ஒரு எகிப்திய நாட்டவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் நாடுகடத்தலுக்கு தண்டனை விதித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

குவைத் செய்தி நிறுவனத்தின் (KUNA) கணக்கை ஹேக் செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், குவைத்திலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறுவது குறித்த தவறான செய்திகளை ஒளிபரப்பியதற்கும்.

இதற்கு கரணம் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் என்று கூறியதற்கும் நீதிமன்றம் அவர் குற்றவாளி எனக் கண்டறிந்தது.

கடந்த ஜனவரியில், KUNA இந்த செய்தியை மறுத்து, அதன் வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறியது.

குற்றவாளியின் பெயர் மற்றும் வயது வெளியிடப்படவில்லை.

அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் நாடுகடத்தலுக்கு தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter