குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு விமான சேவை தொடக்கம்!

Kuwait India flights
(PHOTO: India in Kuwait/Twitter)

குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இன்று இந்தியர்கள் நாடு திரும்பினர்.

பிரிட்டனில் பரவிய புதிய வகைக் கிருமி காரணமாக கடந்த டிச.21 முதல் 10 நாட்களாக விமானநிலையம் மூடப்பட்டு இருந்தது.

சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய குவைத் – பயணிகள் மகிழ்ச்சி!

இந்நிலையில், இன்று (ஜன.2) அதிகாலை முதல் குவைத் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு தனது சேவையை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிற்கான வந்தே பாரத் விமான சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11:25 மணிக்கு, குவைத்தில் இருந்து இந்தியாவின் விஜயவாடா-ஹைதராபாத்திற்கு AI 1902 விமானம் புறப்பட்டது.

ஏர் இந்தியா விமானத்தில் நாடு திரும்பும் அனைத்து இந்திய நாட்டினருக்கும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வாழ்த்து கூறியுள்ளது.

குவைத்தின் இன்றைய வானிலை – வானிலை ஆய்வு மையம்!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter