கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களைக் கையாள்வதற்கான புதிய வழிமுறையை வகுத்துள்ளது MoH..!!

Kuwait Health Ministry sets out treatment mechanism for infected medics. (photo : IIK)

கொரோனா வைரஸால் (COVID-19) பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களைக் கையாள்வதற்கான புதிய வழிமுறையை குவைத் சுகாதார அமைச்சகம் திங்களன்று (மே 25) அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் குழுக்களைச் சேர்ந்த ஒருவர் துரதிர்ஷ்டவசமாக வைரஸால் பாதிக்கப்பட்டால், அவர் அல்லது அவள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் நோய்த்தொற்றின் ஐந்தாவது நாளில் பரிசோதிக்கப்படுவார்கள் என்று அமைச்சகத்தின் துணை செயலாளர் Dr. முஸ்தபா ரெட்ஹா குவைத் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பரிசோதனையில் நெகடிவ் வந்தால், அவர் அல்லது அவள் மீண்டும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள், தனிப்பட்ட பாதுகாப்பு கவசங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பரிசோதனையில் பாசிட்டிவ் வந்தால், வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டு பின்னர் 12 அல்லது 13 வது நாளில் சோதிக்கப்படும், அப்போது நெகடிவ் வந்தால், பின்னர் 14 வது நாளில் வேலைக்கு திரும்ப முடியும் என்று அவர் விரிவாகக் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.