வெளிநாட்டில் இருந்து குவைத் வரும் வீட்டு தொழிலாளர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கான கட்டணம் அறிவிப்பு…

Kuwait domestic workers
Photo credit : TimesKuwait

குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் விமானங்களை மீண்டும் இயக்குவதற்கு முழுமையாக தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இருப்பினும், 34 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கான முடிவுகளை அமைச்சர்கள் கவுன்சில் இன்னும் முடிவெடுக்கவில்லை.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

குவைத் ஏர்வேஸின் (two boards) தலைவர் அலி முகமது அல் துகான் மற்றும் குவைத் அல் ஜசீரா இயக்குநர்கள் குழுவின் தலைவர் மார்வன் போடியா ஆகியோரை சிவில் ஏவியேஷன் நிர்வாகிகளை சந்தித்தனர்.

மேலும், அங்கு சேவைத்துறை அமைச்சரும், தேசிய சட்டமன்றத்தின் மாநில அமைச்சருமான முபாரக் அல் ஹாரிஸ் அவர்களும் கலந்து கொண்டார்.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கான பரிசோதனை நடைமுறைகளை மேற்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோய்தொற்று தடுப்பு ஊழியர்கள் முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டில் இருந்து வரும் வீட்டுத் தொழிலாளர்களை தனிமைப்படுத்தப்படுவதற்கு அறைகள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாள் ஒன்றுக்கு மூன்று நேரத்திற்கு உணவு உட்பட கட்டணம் 30 KD க்கு குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 7 நாட்களுக்கு பிறகு சோதனையில் வைரஸ் இல்லை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டால் தனிமைப்படுத்தல் காலம் அத்தோடு முடிவடையும்.

இல்லையெனில், 14 நாட்கள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter