குவைத்தில் வெளிநாட்டவர் தன்னை அறியாமல் 8,000 குவைத் தீனாரை குப்பை தொட்டியில் வீசியுள்ளார்..!!

Kuwait dinaar trash bin
Photo Credit : TimesKuwait

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர் ஒருவர் தன்னை அறியாமல் 8,000 குவைத் தீனாரை குப்பை தொட்டியில் போட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்திய வெளிநாட்டவர் தொழிலாளி ஒருவர் தற்செயலாக 8,000 குவைத் தினார் பணத்தை அல் ஜாப்ரியா பகுதியில் ஒரு குப்பைத் தொட்டியில் போட்டுவித்தாக என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

அவர் செய்த தவறுகளை உணர்ந்த அவர், பணத்தைத் எடுப்பதற்காக அந்த இடத்திற்கு விரைந்துளார்.

ஆனால், அந்த இடத்தில் இருந்த குப்பை தொட்டி காலியாக இருந்ததால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த இடத்திலுள்ள அனைத்து குப்பைத் தொட்டிகளையும் அகதறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பணத்தை உள்ளடக்கிய குப்பைப் பையை மற்ற கழிவுப் பைகளுடன் குப்பைத் தொட்டியில் வீசினார் என்பது அவருக்கு நினைவிருந்தது.

பின்னர் தொழிலாளி காவல் நிலையத்தை அணுகி, அங்கு அவர் தனது கதையை போலீஸ்காரர்களிடம் கூறி ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

மேலும், அவர் முன்பு ஒரு வங்கியில் இருந்து பணம் எடுத்த 8,000 தினார்களின் காசோலையின் நகலைக் காட்டினார்.

அவர் உண்மையைச் சொல்கிறார் என்பதை உறுதி செய்வதற்காகவும், அந்தத் தொகையைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவுவதற்காகவும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter