தொழிலாளர்களுக்கான ஸ்பான்சர்ஷிப் முறையை ரத்து செய்வது தொடர்பாக வெளிவந்த வதந்திகளை குவைத் மறுப்பு..!!

Kuwait denies rumors on cancelling Sponsorship System for workers. (photo : IIK)

குவைத்தின் சமூக விவகார அமைச்சகம் புதன்கிழமை (மே 21) ஊடக அறிக்கையான ஸ்பான்சர்களின் முறையை அகற்ற அமைச்சகம் திட்டமிட்டது என்பதை “பொய்யானது” என்று மருத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பான்சர்களின் தொழிலாளர்கள் முறையை ரத்து செய்வது குறித்த ஊடக அறிக்கைகள் “முற்றிலும் பொய்யானவை” என்று துணை செயலாளர் அப்துல்அஜிஸ் ஷுயாப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் மரியம் அல் அகீல் அவர்கள் இந்த விஷயத்தை அமைச்சர் சபைக்கு கூட முன்மொழியவில்லை என்று அவர் கூறினார்.

இது சமூக விவகார அமைச்சகத்தினால் பெறப்பட்ட வெறும் ஆய்வு என்றும், அது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.

ஊழியர்களுக்கான ஸ்பான்சர்ஷிப் முறையை ரத்து செய்ய குவைத் திட்டமிட்டுள்ளதாக நேற்று சில செய்தித்தாள் மற்றும் ஆன்லைன் தளங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.