குவைத் சர்வதேச விமான நிலையம் மீண்டும் 24 மணி நேரத்திற்கு இயங்க அனுமதி..!!

Kuwait airport reopen
Photo Credit : Q8india

குவைத் சர்வதேச விமான நிலையம் மீண்டும் முழு நேரத்திற்கு இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, COVID-19 நோய்த்தொற்று காரணமாக பகுதி நேரமாக இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

சிவில் ஏவியேஷன் பொது நிர்வாகம் கூறுகையில், வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி முதல் குவைத் சர்வதேச விமான நிலையம் மீண்டும் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கும் என்று தெரிவித்துள்ளது.

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் சுலைமான் அல் பாவ்ஸான் அவர்கள் விமான நிலையத்தின் சுகாதாரத் தேவைகளை மறுஆய்வு செய்வது குறித்து சுகாதார அமைச்சகத்திற்கு ஒரு கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்.

இதை தொடர்ந்து தேவையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் போதுமான பணியாளர்களை வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

மேலும், தொடர்ந்து இதற்கு தேவையான பணியாளர்களை வழங்க NASA Astronaut மற்றும் குவைத் ஏர்வேஸ் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுகாதார நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, கையுறை அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது போன்றவற்றை கடைபிடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter