குவைத்தில் சாலை விபத்தில் இந்தியர் ஒருவர் மரணம்..!!

Kuwait accident indian
Image credit : Weinstien firm

குவைத்தில் சாலை விபத்தில் சிக்கி இந்தியாவை சேர்த்த ஒருவர் மரணம் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

குவைத்தின் Fahaheel பகுதியில் இந்த சாலை விபத்து சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

விபத்தில் சிக்கி இறந்தவர் இந்தியாவில் கேரளா மாநிலம் பாலக்காடு தாச்சம்பாறை பகுதியை சேர்ந்தவர்.

இவரின் பெயர் முகமது முஸ்தபா மற்றும் வயது 48 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்து சம்பவத்தில் முகமது முஸ்தபா மீது கார் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் குவைத்தில் உள்ள சுபஹான் பகுதியில் குவைத் பிளாஸ்டிக் என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

மேலும், இவர் குவைத்தின் அப்பாசியா பகுதியில் வசித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு சலினா என்ற மனைவியும், மூன்று குழந்தைகள் உள்ளது.

இவர் குவைத் KKMA அப்பாசியா கிளையில் உறுப்பினராக உள்ளார்.

இவற்றின் உடல் தாயகம் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter