குவைத்தில் ரமலான் மாதம் முழுவதும் ஏழைகளுக்கு இப்தார் உணவு வழங்கவுள்ளதாக KRCS அறிவிப்பு..!!

KRCS PROVIDES FOOD TO POOR IN KUWAIT DURING RAMADAN.

குவைத் ரெட் கிரசண்ட் சொசைட்டி (KRCS) ரமலான் மாதம் முழுவதும் ஒரு நாளைக்கு 7,000 இப்தார் உணவை தொழிலாளர்கள் மற்றும் பல குவைத் பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

KRCS-ன் பொதுச்செயலாளர் Maha Al-Barjas அவர்கள் இன்று (25.04.2020) செய்தியாளர்களுக்கு அளித்த அறிக்கையில், Al-Mahboula, Khaitan, அல்-அமிரி மற்றும் அல்-சபா மருத்துவமனைகள், குவைத் பல்கலைக்கழகத்தில் உள்ள தொழிலாளர்கள், முபாரக் அல்-கபீர் ஆளுநர் பகுதி, துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் நீர் அமைச்சகம், பயன்பாட்டு கல்வி மற்றும் பயிற்சிக்கான பொது அதிகாரசபை (PAAET) மற்றும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்-பர்ஜாஸ் அவர்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் உதவுவதற்கு வசதியுள்ள நபர்களை நோன்பு மாதத்தில் தேவைப்படுபவர்களுக்கு உதவுமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும், வெப்பமான கோடையில் வறியவர்களுக்கு உதவ முயற்சிக்கும் தன்னார்வலர்களை KRCS-ன் பொதுச்செயலாளர் Maha Al-Barjas அவர்கள் பாராட்டியுள்ளார்.