குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் நடுக்கடலில் தீ விபத்து..!!

Indian Oil tanker fire in midsea
Indian Oil tanker fire in midsea. (image credit : Indian coast Guard)

குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு எண்ணெய் ஏற்றி சென்ற கப்பல் நடுக்கடலில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீ விபத்துக்குள்ளான இந்த கப்பலில் 2,70000 டன் ஆயில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற இந்திய எண்ணெய் கப்பல் இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் நடுக்கடலில் எதிர்பாராத விதமாக தீ பற்றி எரித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

இந்த தீயை அணைக்க இலங்கை கடற்படையை சேர்ந்த 2 கப்பல்கள் மற்றும் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான தி நியூடைமண்ட் என்ற டேங்கர் கப்பல் குவைத், அஹமதி துறைமுக பகுதியில் இருந்து எண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவின் பாரதீப் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் 20 நாட்டிகல் மைல் தொலைவில் கப்பல் வந்து கொண்டிருந்த போது இன்று (செப்டம்பர் 3) காலை 7.45 மணிக்கு திடீரென்று தீ பற்றி எரிந்தது, தகவல் கிடைத்ததும் இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் , விமானங்கள் மீட்புப்பணிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ரஞ்சித் ராஜபக்சே அவர்கள் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms