குவைத்தில் அரசுத் துறை வேலை மீண்டும் தொடங்கும் போது கடைப்பிடவேண்டிய சுகாதார நடவடிக்கைகள்..!!

Government sector to abide by health conditions when work resumes - CSC. (photo : IIK)

குவைத் அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஜூன் 30 செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் பணிகளைத் தொடங்கும்போது சுகாதார நிலைமைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று சிவில் சர்வீஸ் கமிஷன் (CSC) தெரிவித்துள்ளது.

பொதுத்துறை ஆவணங்களை பயன்படுத்துவதையும், நிறுவனங்களுக்குள் அல்லது இடையில் தனிப்பட்ட முறையில் ஆவணங்களை வழங்குவதையும், அரசாங்கத்திற்கு அரசு (G2G) அமைப்பு மூலம் தொடர்புகொள்வதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று CSC துணை செயலாளர் அல்-ஹமாத் அவர்கள் அமைச்சரவை கூட்டத்தின் பிறகு பேசிய ஆன்லைன் செய்தி கூட்டத்தில் தெரிவித்தார்.

பிரதம மந்திரி ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் நோக்கில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு செல்ல முடிவு செய்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு இரவு 8:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை குறைக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை இரண்டாம் கட்டத்தை தொடங்க அரசாங்கம் முடிவு செய்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த தொழிலாளர்களில் அதிகபட்சமாக 30 சதவீதத்துடன் ஊழியர்கள் தங்கள் அலுவலகத்திற்கு வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயை எதிர்கொள்ள சுகாதார அமைச்சகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்பதால் இந்த முடிவிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அல்-ஹமாத் தெரிவித்தார்.

அரசாங்கத் துறைகள், வழக்கமான கிருமிநாசினிகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் குறித்து ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கிடையே இரண்டு மீட்டர் தொலைவு இருக்க வேண்டும் என்றும் அல்-ஹமாத் தெரிவித்துள்ளார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08