குவைத்தில் மீன் சந்தைகள் இன்று (ஜூன் 1) முதல் திறப்பு; ஆன்லைன் முன்பதிவு அவசியம்..!!

Fish markets to open from Monday in kuwait. (photo : IIK)

குவைத்தில் மீன் மார்கெட்டுகள் இன்று (ஜூன் 1) முதல் திறக்கப்படும் என்று மீனவர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

பஹாஹீலில் உள்ள மீன் சந்தை பகல் நேரத்தில் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் பார் கோட் முன்பதிவு படி நுழைவுகள் அனுமதிக்கப்படும்.

மக்கள் தங்கள் வருகையை https://www.moci.shop/ என்ற link-ல் பதிவு செய்யலாம்.

சமீபத்திய தகவலின்படி, ஷார்க்கில் உள்ள மீன் சந்தை புதன்கிழமை முதல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.