குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ள வெளிநாட்டவர்கள் 3 மாத நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம்..!!

Expats can apply for 3 month extension request if residence is expired. (photo : KWTtoday)

குடியிருப்பு விவகாரங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் உதவி துணை செயலாளர் மேஜர் ஜெனரல் அன்வர் அல்-பர்ஜாஸ் அவர்கள் ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டார், காலாவதியான குடியிருப்பு அனுமதி உள்ள வெளிநாட்டவர்களுக்கு 3 மாத கால நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளதாக அல்-அன்பா தெரிவித்துள்ளது.

அல்-அன்பா தினசரி படி, இந்த அறிவுறுத்தல் ஏற்கனவே கடந்த புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்ததாக கூறப்படுகிறது, பாஸ்போர்ட்டின் காலாவதி, பாஸ்போர்ட்டுக்கு போதுமான செல்லுபடியாகாதது போன்ற பல்வேறு காரணங்களால் குடியிருப்பு காலாவதியான வெளிநாட்டவர்கள் இதன் மூலம் பயனடையலாம் மற்றும் அவர்கள் https://eres.moi.gov.kw/individual/en/auth/login என்ற இணைப்பு மூலம் 3 மாத நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவர் நாட்டிற்கு வெளியே இருந்தால், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் குவைத்துக்குள் இருந்தால், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு ஏற்ப தற்காலிக குடியிருப்பு வழங்கப்படும் என்றும் தினசரி செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.