அவசியமான காரணங்களை தவிர உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் – குவைத் சுகாதார அமைச்சர்

Don't leave your home except for necessity, says Health Minister. (photo : IIK)

குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா கூறுகையில், சனிக்கிழமை (மே 30) முதல் முழுமையான ஊரடங்கு உத்தரவு முடிவடைந்தாலும், ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கான அனைத்து நிலைகளையும் நாங்கள் நிறைவு செய்யும் வரை, மிக அவசியமான காரணங்களை தவிர, வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பது மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.

இந்த தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ட்வீட்டில், மூக்கு மற்றும் வாயை முகமூடியால் அல்லது ஒரு துணியால் மூடி, சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், கைகளை கழுவுவதும் முக்கியம், குறிப்பாக கடுமையான நோய்களால் பாதிக்கப்படக்கூடிய வயதானவர்களுக்கு நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.