குவைத் இந்திய தூதரகத்தின் வேலை நேரத்தில் இன்று (23.04.2020) முதல் மாற்றம்..!!

Change in working hours in indianembassy in kuwait due to curfew Timing changes in ramadan.

குவைத்தில் கொரோனா வைரஸ் காரணமாக நடைமுறையில் உள்ள பகுதிநேர ஊரடங்கு உத்தரவு ரமலான் நோன்பு துவக்கம் முதல்
கூடுதலாக 3 மணிநேரத்திற்கு நீட்டிப்புச் செய்து குவைத் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனால், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு மாலை 5 முதல் காலை 6 வரையில் என்பதற்கு பதிலாக ரமலான் மாதம் முதல் மாலை 4 முதல் காலை 8 வரையில் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குவைத் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, பொதுமன்னிப்பு, ரமலான் நோன்பு ஆகிய காரணங்களால் வேலை நேரம் காலை 9:00 முதல் மதியம் 2:30 வரையில் மாற்றியமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.