குவைத் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த இந்தியர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்..!

India traveler died in kuwait flight.

குவைத் நாட்டில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொண்ட இந்தியர் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

குவைத் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் அதிகாலை 1.30 மணிக்கு தரை இறங்குவது வழக்கம். அதுபோல் குவைத்திலிருந்து 287 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் நள்ளிரவில் வானில் பறந்து கொண்டிருந்தபோது, அப்போது விமானத்தில் பயணம் செய்த திருப்பதியை சேர்ந்த ஸ்ரீனிவாசலு பாலாஜி (46) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவருக்கு விமான பணிப்பெண்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர் அப்போதும் அவருக்கு வலி குறையவில்லை. உடனே விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து விவரத்தை தெரிவித்தார்.

இதையடுத்து, விமானிக்கு வழக்கமான நேரத்துக்கு முன்பாக சென்னைக்கு விமானத்தை இயக்கி வர உத்தரவிடப்பட்டதை அடுத்து, விமானம் 12.30 மணிக்கே சென்னையை வந்தடைந்தது. உடனே தயாராக இருந்த மருத்துவ குழுவினர், விமானத்துக்குள் ஏறி, ஸ்ரீனிவாசலுவை சோதனையிட்டனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரியவந்துள்ளது. பின்னர் இந்த தகவல், அவரது உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

பயணி யாராவது இறந்தால், விமானத்தை முழுமையாக சுத்தம் செய்துவிட்டுதான் இயக்கப்படும் அதனால் மீண்டும் 2.50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாக அதிகாலை 5 மணிக்கு குவைத்துக்கு புறப்பட்டது.

தகவல் : தமிழக ஊடகங்கள்.