குவைத்தில் சாகச விளையாட்டின் பயிற்சியின் போது 17 வயது சிறுவன் மரணம்..!!

young Egyptian dies while practicing parkour in mangaf. (image credit : britannica)

குவைத்தில் 17 வயதான எகிப்தை சேர்ந்த வெளிநாட்டவர் மங்காஃப் பகுதியில் உள்ள உயரமான கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

அந்த இளைஞன் தனக்கு பிடித்த பொழுதுபோக்கு விளையாட்டான “parkour” என்று அழைக்கப்படும் சாகசப்பயிற்சி செய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது கட்டிடங்களுக்கு இடையில் ஒரு கூரையிலிருந்து இன்னொரு இடத்திற்கு குதிக்கும் ஆபத்தான விளையாட்டாகும்.

சாட்சிகளின் கூற்றுப்படி, அந்த இளைஞன் தனது சமநிலையை (balance) இழந்து கட்டிடங்களுக்கு இடையில் விழுந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு ஆம்புலன்சுடன் மருத்துவர்கள் வந்தபோது, ​​அந்த இளைஞன் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms