குவைத்தில் விசிட்டிங் விசாவில் உள்ளவர்களின் கவனத்திற்கு..!!

Visit Visas can be extend until Aug 31st for KD 1 fee per month. (photo : TimesKuwait)

குவைத்தில் விசிட்டிங் விசாவில்(Article 14 Temporary Visa) வருகை தந்துள்ள வெளிநாட்டினர் கொரோனா பிரச்சினை காரணமான இந்த சூழ்நிலையில் மாதத்திற்கு 1 தினார் செலுத்தி ஆகஸ்டு வரையில் தங்கள் விசாவை புதுப்பித்தல் செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடியின் காரணமாக பல நாடுகளின் விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் இன்னும் செயல்படவில்லை, அனைத்து வகையான வணிக, சுற்றுலா, குடும்பம் விசிட்டிங் விசாவில் நுழைந்துள்ள எந்தவொரு வெளிநாட்டினருக்கும் ஆகஸ்ட் 31 வரை ஆன்லைனில் மூலம் விசாவை நீட்டிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ தகவல் அடிப்படையில் மே 31, ஞாயிற்றுக்கிழமை முதல் அமைச்சகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு https://moi.gov.kw/main/ சென்று தேவையான தகவல்களை வழங்கினால் மாதத்திற்கு 1 KD கட்டணத்தில் புதுப்பிக்கலாம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக உள்துறை அமைச்சகம் கொரோனா பாதிப்பு காரணமாக சிக்கியுள்ள நபர்களின் விசிட்டிங் விசாகள் மே 31 வரை தானாக நீட்டித்து கொள்ளும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.